உலக பேட்மிண்டன் போட்டி: பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் கரோலினா மரின்...!

உலக பேட்மிண்டன் போட்டி: பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் கரோலினா மரின்...!
x

Image Courtesy: @bwfmedia

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கரோலின் மரினும், தென் கொரிய வீராங்கனை ஆன் செ யங்கும் மோத உள்ளனர்.

ஹோபன்ஹேகன்,

28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின், ஜப்பானிய வீராங்கனை அகானே யமகுச்சியை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய கரோலினா மரின் 23-21, 21-13 என்ற செட் கணக்கில் யமகுச்சியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை சென் யூபியை 21-19, 21-15 என்ற செட் கணக்கில் தென் கொரிய வீராங்கனை ஆன் செ யங் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கரோலின் மரினும், தென் கொரிய வீராங்கனை ஆன் செ யங்கும் மோத உள்ளனர்.

Next Story