கனடா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


கனடா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென்  இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x

Image Courtesy : PTI 

21-17, 21-14 என்ற நேர்செட்களில் இந்திய வீரர் லக்சயா சென் வெற்றி பெற்று அசத்தினார்.

கல்காரி,

கனடாவின் கல்காரி நகரில் கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரர் கென்ட்டா நிஜிமோட்டாவுடன் இந்திய வீரர் லக்சயா சென் மோதினார் .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-17, 21-14 என்ற நேர்செட்களில் இந்திய வீரர் லக்சயா சென் வெற்றி பெற்று அசத்தினார். இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு லக்சயா சென் தகுதி பெற்றுள்ளார்.


Next Story