சென்னை பல்கலைக்கழக தடகளம்: 100 மீட்டர் ஓட்டத்தில் அருண்குமார் புதிய சாதனை


சென்னை பல்கலைக்கழக தடகளம்: 100 மீட்டர் ஓட்டத்தில் அருண்குமார் புதிய சாதனை
x

100 மீட்டர் ஓட்டத்தில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி வீரர் அருண்குமார் புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான 54-வது ஏ.எல். முதலியார் பொன்விழா நினைவு தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி வீரர் அருண்குமார் 10.30 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அவர் இதற்கு முன்பு 2008-2009-ம் ஆண்டு எம்.சி.சி. வீரர் பிரசாத் 10.40 வினாடியில் எட்டிய சாதனையை தகர்த்தார்.

இதேபோல் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் லயோலா வீரர் ஹரிஓம் திவாரி 29 நிமிடம் 58.47 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். இதற்கு முன்பு 2010-2011-ம் ஆண்டு லயோலா வீரர் எழில்நிலவன் 31 நிமிடம் 55.60 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்து வந்தது. குண்டு எறிதலில் லயோலா வீரர் சூர்ய பிரகாசும், 400 மீட்டர் ஓட்டத்தில் எம்.சி.சி. வீரர் அருளும் தங்கப்பதக்கம் வென்றனர்.


Next Story