செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணியில் குகேஷ், பிரக்ஞானந்தா


செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணியில் குகேஷ், பிரக்ஞானந்தா
x

Image Courtesy: Twitter / @FIDE_chess

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிவரும் செப்டம்பர் மாதம் ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிவரும் செப்டம்பர் மாதம் ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி (ஆண்கள் மற்றும் பெண்கள்) அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்களுக்கான அணியில் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் அர்ஜூன் எரிகைசி, விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா பென்டலா ஆகியோரும் உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் இந்திய பெண்கள் அணியில் ஹரிகா துரோணவல்லி, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதை அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் நித்தின் நரங் உறுதி செய்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு மகாபலிபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த கிராண்ட் மாஸ்டர் கோனேரு ஹம்பிக்கு இம்முறை இடம் வழங்கப்படவில்லை.





Next Story