செஸ் ஒலிம்பியாட் - 6வது சுற்று : தமிழக வீரர் குகேஷ் வெற்றி..! விளையாடிய அனைத்து போட்டியிலும் வென்று அசத்தல்


செஸ் ஒலிம்பியாட் - 6வது சுற்று : தமிழக வீரர் குகேஷ் வெற்றி..! விளையாடிய அனைத்து போட்டியிலும் வென்று அசத்தல்
x

Image Courtesy : FIDE/Madelene Belinki

செஸ் ஒலிம்பியாட் தொடரில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன. ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

இன்று நடைபெற்ற 6வது சுற்று போட்டியில் ஆண்களுக்கான இந்திய 'பி' அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் குகேஷ் ஆர்மீனியா வீரர் சர்கிஷியன் ஆகியோர் மோதினர்.

இதில் 41வது நகர்த்தலில் சார்கிஷியனை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார்.இதனால் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.


Next Story