காமன்வெல்த் போட்டி: பதக்கத்தை நாட்டு மக்களுக்கும், ஜூடோ இந்தியாவுக்கும் அர்ப்பணிக்கிறேன் - சுசீலா தேவி


காமன்வெல்த் போட்டி: பதக்கத்தை நாட்டு மக்களுக்கும், ஜூடோ இந்தியாவுக்கும் அர்ப்பணிக்கிறேன் - சுசீலா தேவி
x

காமன்வெல்த் போட்டியில் வென்ற வெள்ளி பதக்கத்தை நாட்டு மக்களுக்கும், ஜூடோ இந்தியாவுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சுசீலா தேவி கூறியுள்ளார்.

பர்மிங்ஹாம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற மகளிர் ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் மைக்கேலா வைட்பூவிடம் வீழ்ந்து சுசீலா தேவி வெள்ளி பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

இந்நிலையில் வெள்ளி பதக்கம் வென்ற சுசீலா தேவி கூறுகையில்,

நான் இந்தப்போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என நினைத்தேன் ஆனால் என்னால் முடியவில்லை. எனது காலில் ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாமல் எனது ஆட்டத்தில் கவனத்தை செலுத்தி பதக்கம் வென்றுள்ளேன். நான் இந்த பதக்கத்தை நாட்டு மக்களுக்கும், ஜூடோ இந்தியாவுக்கும் அர்ப்பணிக்கிறேன். அடுத்ததாக ஆசிய விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story