டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி-சாத்விக்சாய்ராஜ், சிராக் ஜோடி வெற்றி

Image Courtesy: AFP
ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஜோடி, காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.
கோபன்ஹேகன்,
டென்மார்க் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் கிடாம்பி ஸ்ரீகாந்த், தோல்வி அடைந்துள்ளார்.
சிங்கப்பூரின் லோ கீன் யூவிடம் எதிர்த்து விளையாடிய ஸ்ரீகாந்த் 13-21 15-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
அதே நேரத்தில் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, ரவுண்ட் ஆப் 16 ஆட்டத்தில் இந்தோனேசியாவின் முஹம்மது ஷோஹிபுல் ஃபிக்ரி மற்றும் மவுலானா பகாஸ் ஜோடியை 21-14 21-16 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.
Related Tags :
Next Story






