மாவட்ட அளவிலான ' பி ' டிவிஷன் கிரிக்கெட் போட்டி -ஊட்டி கேலக்சி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி


மாவட்ட அளவிலான  பி  டிவிஷன் கிரிக்கெட் போட்டி -ஊட்டி கேலக்சி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 23 July 2023 7:15 PM GMT (Updated: 23 July 2023 7:15 PM GMT)

மாவட்ட அளவிலான ' பி ' டிவிஷன் கிரிக்கெட் போட்டி -ஊட்டி கேலக்சி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பி டிவிஷன் பிரிவு அரையிறுதிப் போட்டியில், லீக் சுற்றுக்களில் அதிக புள்ளிகள் பெற்ற ஊட்டி கேலக்சி கிரிக்கெட் அணி மற்றும் கூடலூர் ஆரஞ்சு கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடின. இந்தப் போட்டியில் டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த கூடலூர் ஆரஞ்சு கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர்கள் கிளிபர்டு சான் மோசஸ் 51 ரன்கள், வினித் 43 ரன்கள், ரோஷன் 29 ரன்கள் மற்றும் அசோக் குமார் 25 ரன்கள் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 210 பந்துகளில் 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடர்ந்து கேலக்ஸி அணி சிறப்பாக விளையாடி 34 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த அணி வீரர்கள் சூர்யா 78 ரன்கள், கெளதம் 51 ரன்கள் எடுத்தனர். மேலும் வில்பிரட் 39 ரன்கள் மற்றும் சதீஷ் 26 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். இதன் மூலம் ஊட்டி கேலக்ஸி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.


Next Story