மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி : கோத்தகிரி காட்டிமா அணி வெற்றி


மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி : கோத்தகிரி காட்டிமா அணி வெற்றி
x
தினத்தந்தி 4 July 2023 12:15 AM IST (Updated: 4 July 2023 11:31 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி:கோத்தகிரி காட்டிமா அணி வெற்றியடைந்தனர்.

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற பி டிவிஷன் பிரிவிற்கான லீக் போட்டியில் கூடலூர் ஆரஞ்சு கிரிக்கெட் அணி மற்றும் கோத்தகிரி காட்டிமா கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த காட்டிமா கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில், 32.1 ஓவர்கள் மட்டும் விளையாடி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 216 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர்கள் ஆனந்தராஜ் 52 ரன்கள், அனிருத் 46 ரன்கள் மற்றும் கர்ணன் 37 ரன்கள் எடுத்தனர். ஆரஞ்சு அணியின் பந்து வீச்சாளர்கள் சித்தராஜ் 4 விக்கெட்டுகள், கிளிப்பர்டு சான் மோசஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 210 பந்துகளில் 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடர்ந்து விளையாடிய கூடலூர் ஆரஞ்சு கிரிக்கெட் அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த அணி வீரர்கள் சஜீவ்ராம் 56 ரன்கள், அசோக் குமார் 40 ரன்கள் எடுத்தனர். காட்டிமா அணியின் பந்து வீச்சாளர்கள் யஷ்வந்த் 4 விக்கெட்டுக்களையும் ஆனந்த ராஜ் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இதன் மூலம் கோத்தகிரி காட்டிமா அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1 More update

Next Story