பிரெஞ்சு ஓபன் : ஹோல்கர் ரூன்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் காஸ்பர் ரூட்


பிரெஞ்சு ஓபன் : ஹோல்கர் ரூன்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் காஸ்பர் ரூட்
x
தினத்தந்தி 2 Jun 2022 2:10 AM GMT (Updated: 2 Jun 2022 7:28 AM GMT)

காஸ்பர் ரூட் வெற்றி பெற்று பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 7-ம் நிலை வீரரான நாா்வேவின் காஸ்பர் ரூட் ,டென்மாா்க் வீரர் ஹோல்கர் ரூன்னும் மோதினா்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாா்வேவின் காஸ்பர் ரூட் 6-1 4-6 7-6(7-2) 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவா் அரையிறுதிக்கு போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளாா்.


Next Story