பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் லக்சயா சென்

Image Courtesy: @BAI_Media / @badmintonphoto
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
பாரீஸ்,
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென் சிங்கப்பூரின் லோஹ் கியன் யெவ் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் 19-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி கண்ட லக்சயா சென் அடுத்த செட்களை 21-15, 21-13 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார்.
இறுதியில் லக்சயா சென் 19-21, 21-15, 21-13 என்ற புள்ளிக்கணக்கில் சிங்கப்பூரின் லோஹ் கியன் யெவ்-வை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் லக்சயா சென் தாய்லாந்தின் குன்லவுட் விடிசார்ன் உடன் மோத உள்ளார்.
Related Tags :
Next Story