ஈட்டி எறிதலில் அரசு பள்ளி மாணவர் முதலிடம்


ஈட்டி எறிதலில் அரசு பள்ளி மாணவர் முதலிடம்
x
தினத்தந்தி 18 Sept 2022 12:15 AM IST (Updated: 18 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு குறுமைய போட்டியில் ஈட்டி எறிதலில் அரசு பள்ளி மாணவர் முதலிடம் பிடித்தார்

கோயம்புத்தூர்

பள்ளி கல்வித்துறை சார்பில் கோவை மேற்கு குறுமைய அளவில் தடகள போட்டிகள் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஈட்டி எறிதலில் சுண்டபாளையம் அரசு பள்ளி மாணவர் கிருஷ்ணா முதலிடம், நரசீபுரம் அரசு பள்ளி மாணவன் கோபாலகிருஷ்ணன் 2-ம் இடம், சின்மயா வித்யலயா பள்ளி மாணவன் தர்ணேஷ் 3-ம் இடம் பிடித்தனர்.

19 வயதுக்கு உட்பட்ட 400 மீட்டர் ஓட்டத்தில் சவ்ரா வித்யா பவன் பள்ளி மாணவன் சத்தியா முதலிடம், ஜெய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் மேகநாதன் 2-ம் இடம், ஸ்ரீ ராகவேந்திர வித்யா பள்ளி மாணவன் விகாஷ் 3-ம் இடம் பிடித்தனர்.

19 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான ஈட்டி எறிதலில் பிரீமியர் வித்ய விகாஷ் பள்ளி மாணவி பிரியதர்ஷிணி முதலிடம், தொண்டாமுத்தூர் அரசு பள்ளி மாணவி நிரஞ்சனா 2-ம் இடம், எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மாணவி மோசிகா 3-ம் இடம் பிடித்தனர்.

1,500 மீட்டர் ஓட்டத்தில் சின்மயா வித்யலயா பள்ளி மாணவி வினிதா முதலிடம், நரசீபுரம் அரசு பள்ளி மாணவி மிலக் 2-ம் இடம், தொண்டாமுத்தூர் அரசு பள்ளி மாணவி யோகேஷ்வரி 3-ம் இடம் பிடித்தனர். அவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story