நெருக்கடியை சமாளிப்பது எப்படி? பி.வி. சிந்து பதில்


நெருக்கடியை சமாளிப்பது எப்படி? பி.வி. சிந்து பதில்
x

Image Courtesy: AFP 

நெருக்கடியில் இருந்து மீள தியானம் உதவுவதாக பி.வி.சிந்து தெரிவித்தார்.

ஐதராபாத்,

உலகின் மிகச்சிறந்த பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவராக இந்தியாவின் பி.வி.சிந்து திகழ்கிறார். 27 வயதான சிந்து இதுவரை ஒலிம்பிக்கில் 2 பதக்கமும், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் உள்பட 5 பதக்கமும் வென்று சாதித்திருக்கிறார்.

அண்மையில் காமன்வெல்த் விளையாட்டிலும் மகுடம் சூடினார். அவர் களம் இறங்கும் போதெல்லாம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறும். மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் தான் ஆடுவார்.

இந்த நிலையில் காணொலி வாயிலாக இளைஞர்களுக்கான உச்சிமாநாடு நிறைவு விழாவில் கலந்து கொண்ட சிந்து நெருக்கடியை திறம்பட கையாள்வது குறித்து பேசினார். அவர் கூறுகையில், 'நீண்ட காலமாக நான் தியானம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளேன். இதன் மூலம் நல்ல நிவாரணம் கிடைப்பதாக எப்போதும் உணர்கிறேன். நெருக்கடியில் இருந்து மீள தியானம் உதவுகிறது. இளைஞர்களும் தியானம் செய்வதை ஒரு போதும் மறந்து விடக்கூடாது' என்றார்.


Next Story