உலக பிளிட்ஸ் செஸ் போட்டி: இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி வெள்ளி வென்றார்


உலக பிளிட்ஸ் செஸ் போட்டி: இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி வெள்ளி வென்றார்
x

உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி வெள்ளி வென்றார்.

உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டியில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி கடைசி நாளான நேற்று 8 கேம்களில் 7.5 புள்ளிகளை பெற்று அசத்தினார். 17-வதுமற்றும் கடைசி சுற்று முடிவில் ஹம்பி 12.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டி சென்றார். இதன் மூலம் உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.

கஜகஸ்தானின் பிபிசரா பாலபயேவா 13 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹரிகா 10.5 புள்ளிகளுடன் 13-வது இடத்தை பெற்றார். இதன் ஆண்கள் பிரிவில் 'நம்பர் ஒன்' வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து 6-வது முறையாக மகுடம் சூடினார். இந்திய வீரர்கள் ஹரி கிருஷ்ணன், நிஹல் சரின், அதிபன் உள்ளிட்டோர் டாப்-10 இடத்திற்குள் கூட வரவில்லை.


Next Story