ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

ஆடவர் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது
ஹாங்சோவ்,
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் 2-வது நாளான நேற்று இந்தியா 5 பதக்கங்களை அறுவடை செய்தது. இந்தியாவுக்கு முதலாவது பதக்கத்தை துப்பாக்கி சுடுதல் வீராங்கனைகள் 'சுட்டு' தந்தனர்.
இந்த நிலையில், 3-வது நாளான இன்று இந்தியா பதக்க அறுவடையை தொடங்கியுள்ளது. இன்று தங்க பதக்கம் வென்ற நிலையில், துடுப்பு படகு போட்டியில் அடுத்தடுத்து இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. 4 பேர் கொண்ட ஆடவர் பிரிவு துடுப்பு படகு போட்டியில் 6:08.61 என்ற நேரதில் இலக்கை எட்டி இந்தியா வெண்கலம் பதக்கத்தை கைப்பற்றியது.
Related Tags :
Next Story