ஹைலோ ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா தோல்வி


ஹைலோ ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா தோல்வி
x

கோப்புப்படம் 

தரவரிசைப் பட்டியலில் 11-வது இடம் வகிக்கும் கிடாம்பி ஸ்ரீகாந்த், இந்தோனேஷிய வீரர் அந்தோனி கின்டிங்கிடம் தோல்வியை தழுவினார்.

சார்ப்ரூக்கன்,

ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் போட்டிகள் ஜெர்மனி நாட்டின் சார்ப்ரூக்கன் நகரில் நடைபெற்று வருகிறது.

உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கம் வென்று தரவரிசைப் பட்டியலில் 11-வது இடம் வகிக்கும் கிடாம்பி ஸ்ரீகாந்த், தரவசிசைப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ள இந்தோனேஷிய வீரர் அந்தோனி கின்டிங்கை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஸ்ரீகாந்த் 21-க்கு 18 மற்றும் 21-க்கு 15 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் டிரீஸா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஆகியோர் தாய்லாந்து வீராங்கணைகளான பென்யபா ஏய்ம்சார்ட் மற்றும் நுன்டகர்ன் ஏய்ம்சார்ட் இணையிடம் 21-க்கு 17, 14-க்கு 21 மற்றும் 21-க்கு 18 என்ற செட் கணக்கில் தோல்வியை சந்தித்தனர்.

1 More update

Next Story