சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி 2-வது தோல்வி


சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி 2-வது தோல்வி
x

இந்திய அணி தொடர்ந்து 2-வது தோல்வியை சந்தித்ததுடன் அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்தது.

சூசோ,

18-வது சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவில் உள்ள சூசோ நகரில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் மலேசியாவை சந்தித்தது. இதில் இந்திய அணி 0-5 என்ற கணக்கில் மலேசியாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

முதலாவது ஆட்டத்தில் சீன தைபேயிடம் வீழ்ந்து இருந்த இந்திய அணி தொடர்ந்து 2-வது தோல்வியை சந்தித்ததுடன் அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்தது. இந்திய அணியில் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து, இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, திரிஷா ஜாலி-காயத்ரி, கலப்பு இரட்டையர் பிரிவில் துருவ் கபிலா-அஸ்வினி ஆகியோரும் தங்கள் ஆட்டங்களில் தோல்வி கண்டனர்.


Next Story