சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் போட்டியில் பட்டம் வென்ற இந்திய வீரர்கள்


சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் போட்டியில் பட்டம் வென்ற இந்திய வீரர்கள்
x

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் இறுதி போட்டியில் வெற்றி பெற்று இந்திய வீரர்கள் பட்டம் வென்று உள்ளனர்.



பேசல்,


சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் நகரில் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை ஆடவர் இரட்டையர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இதனை தொடர்ந்து இன்று நடந்த இறுதி போட்டியில் அவர்கள், சீனாவின் டாங் குயியான் மற்றும் ரென் யூ ஜியாங் இணையை எதிர்த்து விளையாடியனர். போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்புடன் சென்றது.

பேட்மிண்டன் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய இணை, 21-வது இடத்தில் உள்ள சீன இணையை 21-19, 24-22 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது. 2023 சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடரில் சீன இணையின் முதல் தோல்வி இதுவாகும் என்பது கவனிக்கத்தக்கது.

நடப்பு ஆண்டில் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் இருவரும், பட்டத்திற்கான தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து உள்ளனர்.


Next Story