இந்திய மல்யுத்த வீராங்கனைக்கு ஓராண்டு தடை


இந்திய மல்யுத்த வீராங்கனைக்கு ஓராண்டு தடை
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 14 Aug 2023 7:42 PM GMT (Updated: 15 Aug 2023 8:10 AM GMT)

தடை காலம் மே 12-ந்தேதியில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா 2021-ம் ஆண்டு நடந்த ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் 50 கிலோ எடைப்பிரிவில் தொடக்க சுற்றில் தோற்று வெளியேறினார்.

இந்த நிலையில் 30 வயதான அரியானாவைச் சேர்ந்த சீமா பிஸ்லா ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியதாக சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். வீரர், வீராங்கனைகள் போட்டி இல்லாத காலத்திலும் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்ற விண்ணப்பத்தை நிரப்பி கொடுத்து, ஊக்கமருந்து சோதனைக்கு தயாராக இருக்க வேண்டும்.

இந்த விதியை அவர் பின்பற்றவில்லை. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ள ஊக்கமருந்து தடுப்பு ஒழுங்கு கமிட்டி, அவருக்கு ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது. தடை காலம் மே 12-ந்தேதியில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story