தமிழ்நாடு டேக்வாண்டோ சங்க தலைவராக ஐசரி கணேஷ் மீண்டும் தேர்வு


தமிழ்நாடு டேக்வாண்டோ சங்க தலைவராக ஐசரி கணேஷ் மீண்டும் தேர்வு
x

கோப்புப்படம்

தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின் தலைவராக ஐசரி கே.கணேஷ் 4-வது முறையாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை,

தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின் 2023-27-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் நேற்று நடந்தது. இதில் தலைவராக ஐசரி கே.கணேஷ் 4-வது முறையாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர் இந்திய டேக்வாண்டோ சம்மேளன தலைவராகவும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராகவும் இருக்கிறார்

மேலும் பி.செல்வமணி பொதுச்செயலாளராகவும், எஸ்.கோதண்டன் பொருளாளராகவும், பி.வினோஜ், பி.சேகர், கே.மனோகர், சி.சரவணன் ஆகியோர் துணைத்தலைவராகவும், எஸ். ஜோதிபாசு, ஜெ.எஸ்ரா ஸ்டாலின், பி.ஜெயராம், பி.எஸ்.சுதர்சன் ஆகியோர் இணைசெயலாளராகவும், துரைசாமி, ரவீந்திரன், கென்னடி மோனிராஜ், ஆப்ரகாம் லிங்கம், சிஜூ குமார், சுரேஷ், பாலசங்கர், பாலசுப்பிரமணியன், வெங்கடேசன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


Next Story