மாநில துப்பாக்கி சுடுதலில் கந்தவேழ் மதுகுமரன் 3 பதக்கம் வென்றார்


மாநில துப்பாக்கி சுடுதலில் கந்தவேழ் மதுகுமரன் 3 பதக்கம் வென்றார்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 20 Aug 2023 1:46 AM IST (Updated: 20 Aug 2023 12:08 PM IST)
t-max-icont-min-icon

மாநில துப்பாக்கி சுடுதல் (ஷாட்கன்) போட்டி சென்னையை அடுத்த அலமாதியில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சூட்டிங் ரேஞ்சில் நடந்து வருகிறது.

சென்னை,

மாநில துப்பாக்கி சுடுதல் (ஷாட்கன்) போட்டி சென்னையை அடுத்த அலமாதியில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சூட்டிங் ரேஞ்சில் நடந்து வருகிறது. இதில் ஜூனியர் ஆண்கள் டிராப் தனிநபர் பிரிவில் நாகப்பட்டினம் மாவட்ட வீரர் கந்தவேழ் மதுகுமரன் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இந்த பிரிவில் புதுக்கோட்டை வீரர் யுஹன் முத்துக்குமார் தங்கப்பதக்கமும், நாகப்பட்டினம் வீரர் ஆரோன் பென்ஹர் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர். இதன் அணிகள் என்.ஆர்.பிரிவில் கந்தவேழ் மதுகுமரன், ஆரோன் பென்ஹர், ஹர்ஷித் கார்த்திக் ஆகியோர் அடங்கிய நாகப்பட்டினம் மாவட்ட அணி தங்கப்பதக்கமும், இதே அணி ஐ.எஸ்.டி.பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றது. 3 பதக்கம் வென்ற கந்தவேழ் மதுகுமரன் மறைந்த கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவி ஆறுமுகத்தின் பேரன் ஆவார்.

1 More update

Next Story