கொரிய ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்


கொரிய ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி இறுதி போட்டிக்கு  முன்னேற்றம்
x

Image Courtesy:  BAI Media 

இன்று அரையிறுதி ஆட்டத்தில் சாத்விக் - சிராக் ஜோடி , சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஜோடியை எதிர்கொண்டனர்


யோசு ,

கொரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, தென்கொரியாவின் யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இன்று அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஜோடியை எதிர்கொண்டனர். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சாத்விக்-சிராக் ஜோடி 21-15, 24-22 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.


Next Story