பெண்கள் தேசிய குத்துச்சண்டை: லவ்லினா, நிகாத் ஜரீன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி


பெண்கள் தேசிய குத்துச்சண்டை:  லவ்லினா, நிகாத் ஜரீன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி
x

கோப்புப்படம்

பெண்கள் தேசிய குத்துச்சண்டை போட்டியில் லவ்லினா, நிகாத் ஜரீன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றனர்.

போபால்,

6வது எலைட் மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வருகிறது. இதில் அசாமை சேர்ந்த லோவ்லினா, 75 கிலோ கால் இறுதிப் போட்டியில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் மீனா ராணியை எதிர்த்துப் போட்டியிட்டார். தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய லோவ்லினா, 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் மீனா ராணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

அதேபோல, 50 கிலோ எடைப்பிரிவுக்கான காலிறுதிப் போட்டியில் கோவாவின் தனிக்ஷா சாவரை நிகாத் ஜரீன் எதிர்கொண்டார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவந்த நிகாத், தனிஷாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார். னார். அரையிறுதி போட்டிகள் இன்றுமுதல் தொடங்கி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலக சாம்பியன் நிகாத் ஜரீன் (50 கிலோ பிரிவு), டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான லவ்லினா (75 கிலோ) ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இது தவிர 8 ரெயில்வே வீராங்கனைகளும் இறுதி சுற்றை எட்டியுள்ளனர்.


Next Story