மலேசியா மாஸ்டர்ஸ் 2023 பேட்மிண்டன் போட்டி; பட்டம் வென்றார் எச்.எஸ். பிரணாய்


மலேசியா மாஸ்டர்ஸ் 2023 பேட்மிண்டன் போட்டி; பட்டம் வென்றார் எச்.எஸ். பிரணாய்
x

மலேசியா மாஸ்டர்ஸ் 2023 பேட்மிண்டன் போட்டி ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ். பிரணாய் பட்டம் வென்றார்.

கோலாலம்பூர்,

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில், மலேசியா மாஸ்டர்ஸ் 2023 பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டி ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ். பிரணாய் மற்றும் சீன வீரர் வெங் ஹோங்யாங் விளையாடினார்கள்.

விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில், தரவரிசையில் 9-வது இடம் பிடித்து உள்ள 30 வயதுடைய பிரணாய், தொடர்ச்சியாக போராடி இறுதியில் வெற்றி பெற்று உள்ளார்.

இந்த போட்டியில், 21-19, 13-21, 21-18 என்ற செட் கணக்கில் சீன வீரர் வெங்கை வீழ்த்தி பட்டம் வென்று உள்ளார். இந்த போட்டியில் அவர் பெற கூடிய முதல் பட்டம் இதுவாகும்.

6 ஆண்டுகளில் அவரது முதல் ஒற்றையர் பிரிவு பட்டத்திற்கான வெற்றியும் இதுவாகும். மொத்தம் 93 நிமிடங்கள் வரை இந்த போட்டி நடைபெற்றது. இதற்கு முன் இறுதி போட்டியில், இந்தோனேசியாவின் கிறிஸ்டியன் ஆதிநாதன் காயத்தினால், போட்டியில் இருந்து விலகினார்.

அதனால், பிரணாய் இறுதி போட்டிக்கு முன்னேறினார். அதற்கு முன்பு, காலிறுதி போட்டியில், கென்டா நிஷிமோடோ மற்றும் காலிறுதிக்கு முந்தின சுற்றில் லி ஷி பெங் ஆகியோரை முறையே வீழ்த்தி வெற்றி பெற்றார்.


Next Story