பாரா பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் : முதல் நாளில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்

Image Courtesy : Paralympic Committee Of India
இந்தியாவின் மன்பிரீத் கவுர், பரம்ஜித் குமார் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
பியோங்டேக்,
2022 ஆம் ஆண்டிற்கான ஆசியா ஓசியானியா பாரா பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் தென் கொரியாவின் பியோங்டேக் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதல் நாள் போட்டியில் பெண்களுக்கான 41 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மன்பிரீத் கவுர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 2 சுற்றுகளின் முடிவில் மொத்தம் 173 கிலோ எடையை தூக்கி அவர் சாதனை படைத்துள்ளார்.
அதே போல் இந்த தொடரில் நடைபெற்ற ஆண்களுக்கான 49 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பரம்ஜித் குமார் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பரம்ஜித் குமார் இரண்டு சுற்றுகளில் 160 மற்றும் 163 கிலோ எடையை தூக்கினார், இது அவரது வாழ்நாள் சிறந்த சாதனையாகும். இதன் மூலம் இந்திய அணி இந்த தொடரில் தங்கள் பயணத்தை 2 வெண்கல பதக்கங்களுடன் தொடங்கியுள்ளது.






