முனிச் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியா 4-வது இடம்

Image : SAI Media
இந்தியா 1 தங்கம், ஒரு வெண்கலத்துடன் 4-வது இடம் பிடித்துள்ளது.
முனிச்,
ஜெர்மன் நாட்டின் முனிச் நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் பதக்க பட்டியலில் இந்தியா 4வது இடம் பிடித்துள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சரபோத் சிங் தங்கம் வென்றார்.50 மீட்டர் ரைபிள் 3 பொசிஸ்சன் பிரிவில் சிப்ட் கவுர் சம்ரா வெண்கல பதக்கம் வென்றார். இந்தியா 1 தங்கம், ஒரு வெண்கலத்துடன் 4-வது இடம் பிடித்துள்ளது.
மேலும் சீனா 4 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 11 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் முதல் இடம் பிடித்தது. நார்வே ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 3 பதக்கங்கள் பெற்று 2-வது இடம் பிடித்தது.பிரான்ஸ் ஒரு தங்கம், ஒரு வெண்கலத்துடன் 3-வது இடம் பிடித்தது.
Related Tags :
Next Story






