தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் சாம்பியன்
இறுதிப்போட்டியில் தமிழக வீரர்கள் வேலவன் செந்தில்குமார் - அபய் சிங் ஆகியோர் மோதினர்.
சென்னை
சென்னையில் 79-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது . இந்த தொடரில், தேசிய அளவில் 26 மாநிலங்களைச் சேர்ந்த 417 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.
இந்த நிலையில் இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழக வீரர்கள் வேலவன் செந்தில்குமார் - அபய் சிங் ஆகியோர் மோதினர்.
இந்த போட்டியில் 3-0 என்ற கணக்கில் அபய் சிங்கை வீழ்த்தி வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire