புரோ கபடி: டெல்லியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி


புரோ கபடி: டெல்லியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி
x

image courtesy: Dabang Delhi KC twitter

இன்று நடைபெற்ற போட்டியில் தபாங் டெல்லி - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

பெங்களூரு,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் யு மும்பா- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் யு மும்பா அணி 37-29 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தியது.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் தபாங் டெல்லி - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 35-30 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் 4-வது வெற்றியை பெற்ற பெங்கால் வாரியர்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியது.


Next Story