புரோ கபடி லீக்: அரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு 4-வது வெற்றி


புரோ கபடி லீக்: அரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு 4-வது வெற்றி
x

Image Tweeted By @ProKabaddi

அரியானா ஸ்டீலர்ஸ் அணி 29-27 என்ற புள்ளி கணக்கில் திரில் வெற்றி பெற்றது.

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் புனேவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் புனேரி பால்டன் - தபாங் டெல்லி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் புனேரி பால்டன் அணி 43-38 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. நொடிக்கு நொடி பரபரப்புக்கு பஞ்சம் இல்லமால் நடைபெற்ற இந்த போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 29-27 என்ற புள்ளி கணக்கில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அரியானா அணி இந்த தொடரில் 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.


Next Story