புரோ கபடி லீக்: பெங்களூரு அணிக்கு 6-வது வெற்றி- புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடம்


புரோ கபடி லீக்: பெங்களூரு அணிக்கு 6-வது வெற்றி- புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடம்
x

Image Tweeted By @ProKabaddi

பெங்களூரு அணி 37-31 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் புனேவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்- பெங்களூரு அணிகள் மோதின.

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற இந்த போட்டியில் பெங்களூரு அணி 37-31 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பெங்களூரு அணி சார்பாக சிறப்பாக ரெய்டு சென்ற பரத் 4 போனஸ் புள்ளிகள் உட்பட 10 புள்ளிகளை குவித்தார். இதன் மூலம் இந்த தொடரில் 6-வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.


Next Story