புரோ கபடி லீக்; பெங்களூரு புல்ஸ் - தபாங் டெல்லி அணிகள் இன்று மோதல்


புரோ கபடி லீக்; பெங்களூரு புல்ஸ் - தபாங் டெல்லி அணிகள் இன்று மோதல்
x

இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் - யு மும்பா அணிகள் மோத உள்ளன.

ஆமதாபாத்,

10-வது புரோ கபடி லீக் திருவிழா இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோத உள்ளன. அதேபோல் , இன்று இரவு 9 மணிக்கு நடைபெற உள்ள மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் - யு மும்பா அணிகள் மோத உள்ளன.


Next Story