புரோ கபடி லீக்; பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி!


புரோ கபடி லீக்; பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி!
x

image courtesy; twitter/ @ProKabaddi

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் - யு மும்பா அணிகள் விளையாடி வருகின்றன.

ஆமதாபாத்,

10-வது புரோ கபடி லீக் திருவிழா இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இதில் இன்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 38-31 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் - யு மும்பா அணிகள் விளையாடி வருகின்றன.


Next Story