புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி


புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி
x

Image Courtesy: @ProKabaddi / @DabangDelhiKC

இன்று நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் ஆடி வருகின்றன.

கொல்கத்தா,

10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி - தமிழ் தலைவாஸ் அணிகள் ஆடின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 45-43 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து இந்த தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் ஆடி வருகின்றன.


Next Story