புரோ கபடி லீக்: தபாங் டெல்லி - பாட்னா பைரேட்ஸ் ஆட்டம் டிரா


புரோ கபடி லீக்: தபாங் டெல்லி - பாட்னா பைரேட்ஸ் ஆட்டம் டிரா
x

image courtesy: ProKabaddi twitter

நேற்று நடைபெற்ற போட்டியில் தபாங் டெல்லி - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

ஜெய்ப்பூர்,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் 36 - 31 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் தபாங் டெல்லி - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 39 புள்ளிகள் எடுத்தன.

இதையடுத்து தபாங் டெல்லி - பாட்னா பைரேட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 39-39 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.


Next Story