புரோ கபடி லீக்; குஜராத் ஜெயன்ட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்..!


புரோ கபடி லீக்; குஜராத் ஜெயன்ட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்..!
x
தினத்தந்தி 2 Dec 2023 2:44 PM IST (Updated: 2 Dec 2023 2:51 PM IST)
t-max-icont-min-icon

10-வது புரோ கபடி லீக் தொடர் ஆமதாபாத்தில் இன்று தொடங்குகிறது.

ஆமதாபாத்,

10-வது புரோ கபடி லீக் தொடர் ஆமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் இன்று நடைபெற உள்ள தொடரின் முதலாவது ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதனையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெற உள்ள 2-வது ஆட்டத்தில் யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் அணிகள் விளையாட உள்ளன.



1 More update

Next Story