புரோ கபடி லீக்; யு மும்பா அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி


புரோ கபடி லீக்;  யு மும்பா அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி
x

39 - 37 என்ற கணக்கில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.

ஆமதாபாத்,

10-வது புரோ கபடி லீக் திருவிழா ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இதில் இன்று இரவு நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - யு மும்பா அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின. இறுதியில் ஆட்ட நேர முடிவில் 39 - 37 என்ற கணக்கில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.


Next Story