புரோ கபடி லீக்: பர்தீப் நர்வால் அசத்தல்- உ.பி யோத்தா அணிக்கு 2-வது வெற்றி


புரோ கபடி லீக்: பர்தீப் நர்வால் அசத்தல்- உ.பி யோத்தா அணிக்கு 2-வது வெற்றி
x

உ.பி யோத்தா சார்பில் சிறப்பாக ரெய்டு செய்த பர்தீப் நர்வால் 14 புள்ளிகளை கைப்பற்றினார்.

பெங்களூரு,

புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் கடந்த 7-ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் - யு மும்பா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் புனேரி பால்டன் அணி 30-28 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து அடுத்ததாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உ.பி யோத்தா - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் உ.பி யோத்தா அணி 44-37 என்ற கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றியை ருசித்தது. உ.பி யோத்தா சார்பில் சிறப்பாக ரெய்டு செய்த பர்தீப் நர்வால் 14 புள்ளிகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்த தொடரில் உ.பி யோத்தா அணி 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.


Next Story