புரோ கபடி லீக்: யு மும்பா அணியை வீழ்த்தி பாட்னா பைரட்ஸ் வெற்றி

இந்த சீசனில் பாட்னா அணி 4-வது வெற்றியை பெற்று அசத்தியுள்ளது.
புனே,
12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் புனேவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பாட்னா பைரட்ஸ்- யு மும்பா அணிகள் மோதின.
பரபரப்பான இந்த போட்டியில் பாட்னா பைரட்ஸ் அணி 34- 31 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பாட்னா அணி தரப்பில் சிறப்பாக ரெய்டு சென்ற சச்சின் 12 புள்ளிகளை குவித்தார். இதன் மூலம் இந்த சீசனில் பாட்னா அணி 4-வது வெற்றியை பெற்று அசத்தியுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





