புரோ கபடி லீக்; பாட்னா பைரேட்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் இன்று மோதல்..!


புரோ கபடி லீக்; பாட்னா பைரேட்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் இன்று மோதல்..!
x

Image Courtesy: @PatnaPirates / @tamilthalaivas

12 அணிகள் கலந்து கொண்டுள்ள 10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

ஜெய்ப்பூர்,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று ஒரே ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. அதன்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் அந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோத உள்ளன.


Next Story