புரோ கபடி லீக் ; உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி


புரோ கபடி லீக் ;  உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி
x

இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதின.

சண்டிகர்,

10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய புனேரி பால்டன் அணி 40 - 38 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.


Next Story