புரோ கபடி லீக்; பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி..!


புரோ கபடி லீக்; பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி..!
x

Image Courtesy: @ProKabaddi

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே புனேரி பால்டன் அணி புள்ளிகளை குவித்தது.

இறுதியில் 46-28 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது.


Next Story