புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் இன்று மோதல்


புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 11 Feb 2024 4:02 AM GMT (Updated: 11 Feb 2024 5:51 AM GMT)

இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா,

10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.

தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன


Next Story