புரோ கபடி லீக்: டெல்லி அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி..!


புரோ கபடி லீக்: டெல்லி அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி..!
x

image courtesy: ProKabaddi twitter

இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் தமிழ் தலைவாஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின.

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் புனேவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் பெங்களூரு அணி 37-31 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த நிலையில் தொடர்ந்து 8.30 மணிக்கு நடைபெற்ற 2-வது போட்டியில் தமிழ் தலைவாஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 49-39 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.


Next Story