புரோ கபடி லீக்; உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி


புரோ கபடி லீக்; உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி
x

தொடக்கம் முதல் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக விளையாடியது

மும்பை,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக விளையாடியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 46 - 27என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.


Next Story