புரோ கபடி லீக்: அரியானா அணியை துவம்சம் செய்த புனே- புள்ளி பட்டியலில் முதலிடம்


புரோ கபடி லீக்: அரியானா அணியை துவம்சம் செய்த புனே- புள்ளி பட்டியலில் முதலிடம்
x

Image Tweeted By ProKabaddi

புனே அணி 9 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. 2-வது கட்டமாக இந்த போட்டிகள் புனேவில் நடைபெற்று வந்து நிலையில் அடுத்த கட்டமாக இந்த தொடர் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் அரியானா- புனேரி பால்டன் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய புனே வீரர்கள் துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் புனே அணி 41-28 என்ற புள்ளி கணக்கில் அரியானா அணியை துவம்சம் செய்து தொடரில் 9-வது வெற்றியை பெற்றது. இதன் மூலம் அந்த அணி 15 போட்டிகள் 9 வெற்றிகளுடன் 54 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.


Next Story