புரோ கபடி லீக்: முதல் வெற்றியை பதிவு செய்தது யு மும்பா அணி


புரோ கபடி லீக்: முதல் வெற்றியை பதிவு செய்தது யு மும்பா அணி
x

Image Tweeted By @ProKabaddi

யு மும்பா அணி 30-23 என்ற கணக்கில் யுபி யோத்தா அணியை வீழ்த்தியது.

பெங்களூரு,

புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் கடந்த 7-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் டபாங் டெல்லி அணி யு மும்பா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 41-27 என்ற புள்ளி கணக்கில் டபாங் டெல்லி அணி, யு மும்பா அணி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தங்கள் முதல் வெற்றியை பெறும் முனைப்பில் யு மும்பா அணி இன்று யுபி யோத்தா அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் யு மும்பா அணி 30-23 என்ற கணக்கில் யுபி யோத்தா அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 7 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற யு மும்பா அணி இந்த சீசனில் தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.


Next Story