புரோ கபடி லீக்: உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு புல்ஸ்..!


புரோ கபடி லீக்: உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு புல்ஸ்..!
x

image courtesy: ProKabaddi twitter

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின.

பெங்களூரு,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்த தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 35-32 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி 38-36 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.


Next Story