புரோ கபடி லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தி உ.பி.யோத்தாஸ் வெற்றி..!


புரோ கபடி லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தி உ.பி.யோத்தாஸ் வெற்றி..!
x

image courtesy: ProKabaddi twitter

இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு புல்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதின.

லக்னோ,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள ஷஹீத் விஜய் சிங் பதிக் விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி 46-33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் உ.பி.யோத்தாஸ் அணி 34-33 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.


Next Story