புரோ கபடி: தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் விலகல்


புரோ கபடி: தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் விலகல்
x

தனிப்பட்ட காரணத்துக்கான தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் உதய்குமார் விலகி இருக்கிறார்.

பெங்களூரு,

12 அணிகள் இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 4 தோல்வி, ஒரு 'டை' என்று 10 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் தனிப்பட்ட காரணத்துக்கான தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் உதய்குமார் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக அஷன் குமார் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அஷன் குமார் புனேரி பால்டன் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார்.


Next Story