கைப்பந்து லீக் போட்டி: சென்னை அணி 2-வது வெற்றி


கைப்பந்து லீக் போட்டி: சென்னை அணி 2-வது வெற்றி
x
தினத்தந்தி 21 Feb 2024 2:30 AM IST (Updated: 21 Feb 2024 2:30 AM IST)
t-max-icont-min-icon

9-வது லீக் ஆட்டத்தில் சென்னை பிளிட்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்சை வீழ்த்தியது.

சென்னை,

9 அணிகள் இடையிலான 3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் சென்னை பிளிட்ஸ் 15-10, 15-12, 16-14 என்ற நேர்செட்டில் கொச்சி புளூ ஸ்பைக்கர்சை வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 2-வது வெற்றியை தனதாக்கியது. சென்னை அணியின் கேப்டன் அகின் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு டார்படோஸ்-மும்பை மீட்டியார்ஸ் (மாலை 6.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story